பேச்சு வார்த்தைக்கு சென்ற இடத்தில் பெண்களை பார்த்து வார்த்தை விட்ட பாமக MLA - கதறி அழுத பெண்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் உள்ள அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கடந்த வாரம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இரு தரப்பு அழைப்பின் பேரில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஒரு தரப்பினர் ஆண்களாகவும், மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேசினர். தொடர்ந்து பெண்கள் எதையும் கேட்காமல் பேசியதால் ஆவேசமடைந்த எம்எல்ஏ அருள், பெண்களைப் பார்த்து, அநாகரீகமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கேட்ட பெண்கள் எம்எல்ஏவிடம் கையெடுத்து கும்பிட்டு இப்படி பேச வேண்டாம் என கதறி அழுதனர்.