காட்டுத்தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ.. உடனே பாய்ந்த அதிரடி நடவடிக்கை

Update: 2024-12-19 04:39 GMT

காட்டுத்தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ.. உடனே பாய்ந்த அதிரடி நடவடிக்கை

நெல்லையில் இளைஞரை போக்குவரத்து காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில், அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் போக்குவரத்து காவலர் சார்லஸ் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி உள்ளார். அவர்கள் நிறுத்தாமல் சார்லஸ் மீது மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. உடனடியாக சார்லஸ் மற்ற காவலர்களுடன் சேர்ந்து அந்த இளைஞர்களை மடக்கி பிடித்து ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கியதுடன், ரூபாய் 3 ஆயிரத்து 500 அபராதம் விதித்துள்ளார். இந்த வீடியோ அதிகம் பரவிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்