ஒரு கையில் பீர்.. மறுகையில் கிளாஸ்.. சென்னையை அதிர வைத்த நபர்..

Update: 2024-12-19 04:31 GMT

சென்னை பள்ளிக்கரணை மேடவாக்கம் 100 அடி சாலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் காரை ஓட்டி சென்ற ஒருவர் ஸ்டேரிங்கை பிடிக்காமல், ஒரு கையில் கிளாசை பிடித்துக் கொண்டு சென்றார். மற்றொரு கையில் பீர் பாட்டிலை எடுத்த அவர் பீரை நிரப்பியவாறு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதே சாலையில் பேருந்தில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சூழலில், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்