வேகமாக மோதிய பேருந்து.. மகள் கண்முன்னே துடிதுடித்து பிரிந்த அம்மா உயிர்

Update: 2025-03-17 07:35 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து மோதி, மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணவேணி என்பவர், தனது மகள் பானுப்பிரியாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த பானுப்பிரியா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாதால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்