மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் செல்வராஜ் தகவல் உரிமைச் சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும், பொது தகவல் அலுவலர் சரியான பதிலை மனுதாரருக்கு கொடுக்க வேண்டும் என்றார். கேள்விக்கு பதில் இல்லை என்றால் பதில் எங்கே கிடைக்கும் எனத் தெளிவாக கூற வேண்டும் என்றார். பதில் இல்லை என்றால் மனுவை திருப்பி அனுப்பாமல் சம்பந்தப்பட்ட அரசுத்துறைக்கு மனுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றார். பொது தகவல் அலுவலர், தகவல் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்கவில்லை என்றால் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.