பல வீடுகளில் அசால்டாக திருடியவரை 2 முறை சம்பவம் செய்த ஒத்த வீடு - இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு கதவை உடைத்து, நான்கு சவரன் தங்க நகையை திருடி சென்ற இளைஞர், தற்போது அதே வீட்டில் பித்தளை பொருட்களை திருடியபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
இரணியல் அருகே வில்லுக்குறி வாழவிளை பகுதியை சேர்ந்த ராமசந்திரனின் மனைவி பூபதி, வீட்டில் தனிமையில் இருந்தபோது, வீட்டின் பின்பகுதியில் சத்தம்கேட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த குத்துவிளக்கு, அண்டா உள்ளிட்ட பித்தளை பொருட்களை அதே பகுதியை சேர்ந்த ஜான்ரென்சோ பிரபு திருடி செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தபோது, அதே வீட்டில் இதற்கு முன்பும் அவர் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.