ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம் - பரபரப்பு காட்சிகள்
சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள், எடை குறைவாக கொடுப்பதாகக் கூறி ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரேஷன் கடையில் முறையான ஊழியர்கள் பணியில் இல்லாமல், ஒப்பந்த ஊழியர்களை வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை நூதன முறையில் எடை குறைவாக கொடுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.