வாங்கிய 1 மணி நேரத்தில் பற்றி எரிந்த பைக்...அதிர்ச்சியில் விழிபிதுங்கி நிற்கும் கஸ்டமர்..
வாங்கிய 1 மணி நேரத்தில் பற்றி எரிந்த பைக்...அதிர்ச்சியில் விழிபிதுங்கி நிற்கும் கஸ்டமர்.. பரபரப்பு காட்சிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில், புதிதாக வாங்கப்பட்ட இருசக்கர வாகனம், ஒரு மணி நேரத்தில் தீ பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூரை சேர்ந்தவர் சூர்யா. இவர், ராணிப்பேட்டையை அடுத்த திமிரியில் உள்ள ஷோரூம் ஒன்றில் இருந்து புதிதாக பல்சர் பைக் வாங்கியுள்ளார். நண்பருடன் அம்மூரில் சோளிங்கர்-வாலாஜா சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு, மீண்டும் இயக்கிய போது திடீர் என தீப்பிடித்துள்ளது. தீயை அணைக்க முடியாததால், பைக் முழுவதும் பற்றி எரிந்தது. ஆசை அசையாய் வாங்கிய பைக் ஒரு மணி நேரத்திற்குள் தீ பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.