``போலி.. ப்பு.. தாசில்தார் எல்லாம் அவுக கையில இருக்காக.. ப்பு..'' - 300 சவரன் நகை.. கதறும் பாட்டி

Update: 2025-01-11 09:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், கணவரின் இரண்டாவது மனைவியின் மகன், 300 சவரன் நகைகள் மற்றும் சொத்துகளை அபகரித்து விட்டதாக மூதாட்டி ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். கமுதியைச் சேர்ந்த போஸ் தேவர் என்பவரின் முதல் மனைவி பஞ்சவர்ணம், தனது மகனுடன் இந்த புகாரை அளித்துள்ளார். போஸ் தேவர் ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், அவருடைய இரண்டாவது மனைவி பாக்கியத்தின் மகனான போஸ் செல்வா என்பவர், 300 பவுன் நகைகளையும், பிற சொத்துகளையும் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். போஸ் செல்வா, ஆளும் கட்சியின் கவுன்சிலர் என்பதால், புகார் கொடுத்தாலும் கமுதி காவல் நிலையத்தில் வாங்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்