பெண் போலீசை ஆபாசமாக பேசிய திமுக பிரமுகர் கைது

Update: 2025-03-17 09:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த நம்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் இளங்கோவன் என்பவர், ஒரு ஜோடியின் திருமணம் தொடர்பான விசாரணைக்காக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பெண் போலீசார்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து பணியில் இருந்த பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோவனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்