இணையத்தில் கசிந்த வீடியோ.. பிரக்யா நாக்ரா விளக்கம்

Update: 2024-12-08 01:53 GMT

இணையத்தில் கசிந்த வீடியோ.. பிரக்யா நாக்ரா விளக்கம்

ஹரியானாவை சேர்ந்த பிரக்யா நாக்ரா தமிழில் ஜீவா நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 25 வயதே ஆன பிரக்யா நாக்ரா தனது பாய் ஃபிரெண்டுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து, தெலங்கனாவில் உள்ள சைபர் கிரைமில் பிரக்யா நாக்ரா புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள பிரக்யா நாக்ரா, டெக்னாலஜி என்பது நமக்கு உதவுவதற்காகவே தவிர, நம் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். வேறு எந்த பெண்ணும் இப்படிப்பட்ட சோதனையை சந்திக்க‌க் கூடாது என்றும், இவை அனைத்திலும் வலுவாக இருக்க முயற்சிப்பதாகவும் பிரக்யா நாக்ரா தெரிவித்துள்ளார். இதே போன்று, ராஷ்மிகா மந்தனா, சமந்தா, ஓவியா என பல முன்னணி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகியிருந்த‌து குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்