5,000 வீரர்கள், 12,000 காளைகள் - களைகட்ட போகும் பொங்கல் ஜல்லிக்கட்டு | Pongal Jallikattu | Madurai

Update: 2025-01-08 02:07 GMT

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் உள்ளிட்ட மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்-லைன் டோக்கன் முன்பதிவு நிறைவடைந்தது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜனவரி 14 முதல் 16-ம் தேதி வரை மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஆன்-லைன் டோக்கன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்க மொத்தமாக 5 ஆயிரத்து 347 வீரர்களும், 12 ஆயிரத்து 632 காளைகளும் முன்பதிவு செய்துள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரித்துள்ளது. அலங்காநல்லூரில் ஐந்தாயிரத்து 786 காளைகளும், ஆயிரத்து 698 வீரர்களும், பாலமேட்டில் நான்காயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல், அவனியாபுரத்தில் இரண்டாயிரத்து 26 காளைகளும், ஆயிரத்து 735 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்கு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக டோக்கன் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்