மீட்கப்பட்டது சென்னையின் இதயம்.. மீண்டும் பொக்கிஷமாக மாறிய அதிசயம்.. இது எந்த இடம்னு தெரிதா?
சென்னையில், குப்பை கழிவுகள் அகற்றி மீட்கப்பட்ட 96 ஏக்கர் நிலத்தை சதுப்பு நிலமாக வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக மாநகராட்சி துணை ஆணையர் அமீத் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 225 ஏக்கரில் பெருங்குடி குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பை கொட்டப்பட்டதால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நிலத்தடிநீர் மாசடைந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறு சுழற்சி திட்டத்தில்,
96 ஏக்கரில் குப்பை கிடங்கில் கழிவுகளை அகற்றி சதுப்பு நிலத்தை மீட்டெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நவீன தொழில்நுட்ப உதவியுடன், 96 ஏக்கரில் இருந்த 1 கோடியே 30 லட்சம் டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. குப்பை கழிவுகளில் இருந்து மீட்கப்பட்ட 96 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்பட்ட பணிகளை, 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதுகுறித்த மாநாட்டை சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனர் அமீத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்கப்பட்ட 96 ஏக்கர் நிலத்தை சதுப்பு நிலமாக வைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.