தவழ்ந்து சென்ற குழந்தையின் உயிர் துடித்து நின்றது - உறைந்து நின்ற தாய்.. பெற்றோர்களே உஷார்
வேப்பந்தட்டை அடுத்த பசும்பலூர் பகுதியில் வசித்து வரும் சிங்காரவேலு - சந்தியா தம்பதியினரின் மூத்த குழந்தை விசித்ரா, தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். வீட்டிலிருந்து பள்ளி வாகனம் மூலம் விசித்ரா பள்ளி சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் விசித்ராவை ஏற்றி விட சென்ற சந்தியா, கையில் வைத்திருந்த தனது மகன் சண்முகவேலை கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது தவழ்ந்து சென்ற குழந்தை, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான்.