கிடுகிடுவென உயர்ந்த நீர்மட்டம்..எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரலாம்.. பொதுமக்கள் செய்த அந்த செயல்

Update: 2024-12-14 12:30 GMT

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நாபாளையம் மேம்பாலத்தில் பொதுமக்கள் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கொட்டி தீர்த்த கனமழையால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நிரம்பியது.

இதனையடுத்து ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியில் 2வது நாளாக 16500 கனஅடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், வல்லூர் அணைக்கட்டுகள் வழியாக எண்ணூர் கடலில் சென்று கலக்கிறது.

கொசஸ்தலை ஆற்றின் ஒரு கரையில் அமைந்துள்ள நாபாளையம், மணலி புதுநகர் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் உபரிநீர் செல்வதால் எப்போது வேண்டுமானாலும் தங்களது குடியிருப்புகளை வெள்ள நீர் சூழலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது கார்களை மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்து பாதுகாக்க தொடங்கியுள்ளனர். நாபாளையம், மணலி புதுநகர் சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதி கனமழை பெய்தாலோ, அல்லது ஆற்றில் செல்லும் வெள்ளம் சூழ்ந்தாலோ பாதிப்பை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கார்களை மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். சனி, ஞாயிறு பெரும்பாலானோருக்கு விடுமுறை என்பதாலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு குறையும் வரையில் கார்களை பாதுகாப்பாக மேம்பாலம், சிறுபாலங்களின் மீது நிறுத்தி வைக்க அவற்றின் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்