வறுமை - பூ வியாபாரி மனைவியை கொன்று தானும் தற்கொலை

Update: 2024-12-14 12:19 GMT

பிள்ளைச்சாவடி கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன், துணி வியாபாரம் செய்த அபி என்பவரை காதலித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அபிக்கு நீரிழிவு நோய் இருந்ததால் அதிகம் மாத்திரை எடுத்துக் கொண்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மணிகண்டன் பூ வியாபாரம் செய்து வந்த நிலையில், அதிக லாபம் இல்லாததால், கட்டிட கொத்தனார் வேலைக்கும் சென்றார். அபிக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், மருந்து மாத்திரை வாங்குவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் உதவி செய்தனர். ஒருபுறம் வறுமை, மறுபுறம் மனைவியின் உடல்நலத்தால் மன வேதனை அடைந்த மணிகண்டன், தனது மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்த இரும்புக் குழாயில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்