ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சனாதனத்தைப் பாதுகாக்க தனது ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியைத் துவங்க உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்... சனாதன தர்மம் இல்லாமல் நமது நாடு இல்லை என்று தெரிவித்துள்ள அவர், இந்து மதத்தையோ சனாதன தர்மத்தையோ கேலி செய்யும் விதம் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.