இறந்த கோழியின் வாயில் இருந்து நெருப்பு

Update: 2024-12-27 00:11 GMT

கர்நாடகாவில் இறந்த கோழிகள் நெருப்பை கக்குவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹாசன் மாவட்டம் ஹடிகே கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான 12 கோழிகள் மொத்தமாக இறந்துள்ளன. இறந்த கோழியின் வயிற்றை அவர் அழுத்தி பார்த்தபோது, கோழியின் வாயில் இருந்து நெருப்பு வந்துள்ளது. இதனை அவர் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார். கோழிகளுக்கு மர்மநபர்கள் யாரோ ரசாயனம் கலந்த விஷத்தை கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்