நத்தம் அருகே உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யனார்புரத்தை சேர்ந்த வேலு, கடந்த 7-ம் தேதி இரவு அரவங்குறிச்சி சாலையோர கடையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்றிரவு வயிற்று வலியால் அவதியுற்ற வேலுவை, அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.