பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய தமிழக முதல்வருக்கு மாநாட்டில் ஏக மனதாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான கோவில்களை தேர்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளவும், முதல் கட்டமாக 143 திருக்கோயில்களில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பழனி கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், கலைஞர்கள் மற்றும் அடியார்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் பத்து பேருக்கு விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அறுபடை வீடு கோயிலில் முருகன் பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி திருவிழாக்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.அறநிலை துறையின் ஆளுமையின் கீழ் உள்ள கோவில்களில் மாணவ மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.