பழனியில் அனைத்துலக முத்தமிழ் மாநாட்டு அருங்காட்சியகத்தை காண, 30-ம் தேதி வரை அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாநாட்டை பார்க்க முதலில் உள்நாட்டவர்க்கு ஐநூறு ரூபாய் எனவும், வெளிநாட்டவருக்கு ஆயிரம் ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு, விழா மற்றும் மாநாட்டு அருங்காட்சியகத்தை காண அனைவருக்கும் இலவசம், இலவச உணவு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மேலும் 5 நாட்கள் அருங்காட்சியகத்தை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.