பழனி தைப்பூசத் திருவிழா - சிறப்பு ரயில்கள் இயக்கத்திற்கு வாய்ப்பா? | Palani Temple | Special Train
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதிய அவர், கோயம்புத்தூர்-மதுரை, பாளையங்கோட்டை-பழனி, திருச்சி-பழனி, காரைக்குடி-பழனி, ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரியுள்ளார். திருவிழா காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இதற்கு தென்னக ரயில்வேயின் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.