வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக சரத்குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.