பொறுத்து பொறுத்து பார்த்து கொந்தளித்த நிர்மலா சீதாராமன்

Update: 2024-12-16 08:09 GMT

குடும்ப அரசியலுக்காகவும் அதிகார நாற்காலியை காப்பாற்றவும் அரசியல் சாசனத்தை காங்கிரஸ் திருத்திக் கொண்டே இருந்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆயிரத்து 950 ஆம் ஆண்டு கருத்துரிமையை கட்டுப்படுத்தும் விதமாக முதல் அரசியல் சாசனம் நேரு தலைமையிலான அரசு கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார். 1975ஆம் ஆண்டு தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 39 வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததாக கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கொண்டு வந்த அரசியல் சட்ட திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அல்ல எனக் குறிப்பிட்டார். குடும்ப அரசியலுக்காகவும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அரசியல் சாசனத்தை காங்கிரஸ் திருத்திக் கொண்டே இருந்ததாக நிதியமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்