கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அதற்கு பழந்தின்னி வவ்வால்களே காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக - கேரளா எல்லை பகுதியான பந்தலூரை அடுத்துள்ள எருமாடு கிராமத்திற்கு
ஆயிரக்கணக்கான வவ்வால்கள் திடீரென படையெடுத்துள்ளது. அங்குள்ள மரங்களில் தலைகீழாக தொங்கி வரும் வவ்வால்களை அப்பகுதி மக்கள் அச்சத்துடனும் ஆச்சரியமாகவும் பார்த்து செல்கின்றனர். இதனால் நிபா வைரஸ் பரவுமா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான வவ்வால்களை விரட்டுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.