நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே ஓரசோலையில், அரசு பேருந்தின் முன்பக்கத்தில் ஈஸ்வரி என்ற பெண்
ஏற முயன்ற போது, ஓட்டுனர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி தடுமாறி கீழே
விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறி
இறங்கியது. வலியால் துடித்த அவரை அப்பகுதி மக்கள்
மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி
வைத்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த
இடத்தில் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியலில்
ஈடுப்பட்டனர். போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு,
வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்த பின்
அங்கிருந்து கலைந்து சென்றனர்.