வெளுத்து எடுத்த கனமழை.. "அபாயம்" - வேகமாக பறந்த எச்சரிக்கை

Update: 2024-06-26 15:40 GMT

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, நாடுகாணி, பந்தலூர், தேவர் சோலை மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் கடுமையாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. நாடுகாணி பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் வீடு ஒன்று சேதமடைந்தது. அதேபோல், சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்