திருக்கோவிலூர் அருகே, அரசு பள்ளி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கழுமலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீயை அணைந்தனர். இருப்பினும், பள்ளியில் இருந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர், டிவி, லேப்டாப் உள்ளிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.