இறந்தும் பல உயிர்களுக்கு உயிர்.. கொடுத்த நல்லகண்ணுவின் மருமகள் - தமிழகத்தில் நடந்தது இதுவே முதல் முறை - மரணத்திலும் ஒரு நெகிழ்ச்சி

Update: 2024-06-15 05:45 GMT

நெல்லை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியை சேர்ந்தவர், சேகர் மனைவி அரசம்மாள். செவி மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளியான இவர், பாளையங்கோட்டை குலவணிகர் புரம் பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், அரசம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசம்மாள் மூளைச்சாவால் உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்களின் ஒப்புதலுடன், அரசம்மாளின் கருவிழிகள், தோல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. தொடர்ந்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசம்மாளின் உடலுக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மூளைச்சாவு அடைந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவது, தமிழகத்தில் இதுவே முதல்முறையாகும். உயிரிழந்த அரசம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்