கோடையில் கொட்டி தீர்த்த மழை.. குளிர்ந்த சூழலால் மகிழ்ந்த மக்கள் | TN Rains
அம்பை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியளிட்டனர். நெல்லை மாவட்டம் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.