நெல்லை மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்புடைய 3 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு கோனங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணாவும் நெல்லையில் முகாமிட்டுள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ள அவர்கள், செல்போன் சிக்னல்களை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.