`நீட் கருணை மதிப்பெண்'.. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு NTA வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-06-14 02:00 GMT

நீட் தேர்வு எழுதிய, ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கருணை மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை திரும்பப்பெற்றது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களில், ஆயிரத்து 563 மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததுடன், தேவைப்பட்டால் மறு தேர்வு நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி, ஆயிரத்து 563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை திரும்பப் பெறுவதாக, தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆயிரத்து 563 மாணவர்களுக்கும், ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பொது அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்