மோதிய வேகத்தில் சிதறிய பைக், தனியார் பேருந்து - சிதைந்த 2 கல்லூரி மாணவர்கள் உடல்
தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மலைவேப்பங்குட்டையைச் சேர்ந்த பூந்தமிழன் மற்றும் ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் ராசிபுரத்தைச் சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்... நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தம் பக்கத்தில் பாக்கு மட்டை தயாரிக்கும் நிறுவனம் அருகில் அவர்கள் வந்த சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்... விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...