அரசு பேருந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்ட வந்த வடமாநில நபர்கள்.. காரணத்தை கண்டு மிரண்டு போன போலீஸ்

Update: 2024-11-25 01:38 GMT

நாமக்கல் அடுத்த ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கரூரில் இருந்து வடமாநிலம் நோக்கி சென்ற லாரியை, சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது, லாரியின் கதவு திடீரென திறந்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை லாவகமாக இயக்கியதில் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பேருந்தை நிறுத்தி இது குறித்து கேட்ட அரசு பேருந்து ஓட்டுநரை, லாரிக்குள் இருந்த வட மாநில ஓட்டுநர்கள் இருவர் வாளால் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரிடமிருந்தும் வாளை பறித்து, அவர்களை பேருந்தில் இருந்த பயணிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவமறிந்து வந்த போலீசாரிடம், தங்களின் பாதுகாப்பிற்காக வாளை கையில் வைத்திருந்ததாக வடமாநில லாரி ஓட்டுநர்கள் கூறிய நிலையில், அவர்களை விசாரணைக்காக போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்