நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடு ஆற்றில் செடிகளை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உயிர்காக்கும் வளையங்கள் அணிவித்தும், கயிறு கட்டியும், நடு ஆற்றுக்கு சென்று, முத்துசாமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.