இதுக்கு கூட கொ*லயா..? தலைக்கு ஏறிய ஆத்திரம்.. அப்பாவி நண்பனை கல்லால் அடித்தே கொன்ற நபர்
நாகர்கோவில் அருகே மது வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் நண்பரை கொன்றதாக, கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மேலச்சூரங்குடியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், கடந்த 11-ஆம் தேதி சாலையோரம் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பிரவீனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில், பிரவீனின் நண்பரான கார்த்திக் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மதுவாங்கி தருமாறு கேட்டதற்கு மறுத்ததாலும், தன்னை தரக்குறைவாக திட்டியதாலும், ஆத்திரத்தில் பிரவீனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கார்த்திக் தெரிவித்துள்ளார். எனினும் இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.