காரில் அமர்ந்தபடியே கருகி கிடந்த உடல்.. கோவையை நடுங்கவிட்ட விபத்து

Update: 2024-09-10 02:07 GMT

மேட்டுப்பாளையம் அன்னூர் பிரதான சாலையில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்து தீ பிடித்து எரிந்த கார்.

ஓட்டுநர் இருக்கையில் கருகிய நிலையில் ஆண் பிணம் .யார் அவர் போலீசார் விசாரணை. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் பிரதான சாலை வாகன போக்குவரத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பெரும்பாலும் அந்த சாலை வழியாக அதி வேகமாகவாகனங்கள் வந்தும் சென்றும் கொண்டிருக்கின்றனஇந்த நிலையில் நேற்று(9.9.24) இரவு சுமார் 11:30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னூர் பிரதான சாலையில் வேகமாக வந்த கார் தென்திருப்பதி நால்ரோடு குளிர் பதன கிடங்கு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலைதடு மாறி சாலையோரத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் விழுந்தது விழுந்த வேகத்தில் திடீரென எதிர்பாராத விதமாக கார் தீ பிடித்து எரியத் தொடங்கியது. காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவரால் தீ பிடித்த எரிந்த காரிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் பிடித்த தீ அங்கிருந்த செடி வீடுகளில் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது ஆயினும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பிடித்த தீயில் உடல் கருகி இறந்தவர் யார் என்று உடனடியாக அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்