கண்ணிமைக்கும் நொடியில் தலைகுப்புற கவிழ்ந்த வேன் - உள்ளே இருந்த 2 பேர் நிலை?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 15 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் இந்த வேனில் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், ஓட்டுநர் துரைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. வேன் நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த வடி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் அனைவரும் உயிர்த்தப்பினர்.