மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மறைந்த தனது மாமனார் ஜெயராமனின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர். முன்னதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.