சூர்யவம்சம் பாட்டு கூட 5 நிமிசம்...ஒரே கேள்வி.. நின்ற இடத்திலேயே வாழ்வை மாற்றி காட்டிய அமைச்சர்

Update: 2024-07-23 05:10 GMT

சூர்யவம்சம் பாட்டு கூட 5 நிமிசம்...

ஒரே கேள்வி.. நின்ற இடத்திலேயே

வாழ்வை மாற்றி காட்டிய அமைச்சர் மா.சு

அழுக்குச் சட்டையுடன் ஆதரவின்றி சாலையில் சுற்றித்திரிந்த நபருக்கு, தற்காலிக பணி கொடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் ஒருவர்..

அந்த வகையில் காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போதெல்லாம், தான் செல்லும் வழியில் உள்ளவர்களிடம் இயல்பாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது, அங்கு குப்பைகளை சேகரித்துக் கொண்ட ஒருவர் அமைச்சரை பார்த்து வணக்கம் கூறியுள்ளார்.

அவரை அழைத்த அமைச்சர், அவரது குடும்ப பின்னணி குறித்து கேட்டறிந்துள்ளார்..

அப்போது தான் அவர் திருச்சியை சேர்ந்த ராஜா என தெரிவித்ததோடு, பிழைப்புக்காக சென்னைக்கு வந்ததாகவும், தற்போது சாலையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கழிவுகளை சேகரித்து அதனை பழைய இரும்பு கடைகளில் போட்டு கிடைக்கும் சொற்ப வருவாயில் பிழைப்பை நடத்தி வருவதாக கூறியிருக்கிறார்..

இதனிடையே சம்பந்தப்பட்ட ராஜாவிடம் பேசிய அமைச்சர், ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள் , எங்கு தங்குகிறீர்கள் , வேலை கொடுத்தால் செய்வீர்களா? என கேட்க , புன்னகையுடன் கை கூப்பி வணங்கிய ராஜாவுக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே புதியதொரு வாழ்க்கை கிடைத்தது ...

ஆம்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் உதவியாளர் காரில் ராஜா அழைத்துச் செல்லப்பட்டு அமைச்சரின் லேபர் காலனி இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கேயே குளித்த அவருக்கு புத்தாடைகளும் தரப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக 12 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்துடன் பணியமர்த்தப்பட்டார் ராஜா..

இதனிடையே மருத்துவமனையில் உடற் பரிசோதனை மேற்கொண்ட போது ராஜாவுக்கு மஞ்சள் காமாலை அறிகுறிகளும் இருப்பது தெரியவந்த நிலையில் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் மருத்துவமனையில் ஊழியர் பணியை மேற்கொள்ள உள்ளார்..

அமைச்சரின் இச்செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெகுஜன மக்களிடையே வரவேற்பும் பெற்றுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்