திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே வாலிபர் வெட்டி படுகொலை இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம். சுத்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி இந்திரா காலனியை சார்ந்தவர் அழகுமுத்து இவரது மகன் முத்துகிருஷ்ணன் 21 வயது வாலிபரான இவர் அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார் காலை 6 மணிக்கு பணிக்கு சென்று விட்டு மதியம் மூன்று மணிக்குள் பணி முடிந்து திரும்பி வந்து விடுவாராம். இந்த நிலையில் இன்று தொழிற்சாலைக்கு பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் அப்பகுதியில் உள்ள கல்வெட்டான்குழி அருகே நண்பர்களுடன் மாலையில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாலை நேரத்தில் அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நண்பர்களை அங்கிருந்து விரட்டி விட்டு முத்துகிருஷ்ணனை முகம் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நண்பன் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தை ஊருக்குள் சென்று தெரிவிக்க ஊர் பொதுமக்கள் உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிய வர சுத்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு முதலில் வந்து சேர்ந்தனர் அதற்குள் ஊர் பொதுமக்கள் உறவினர்கள் அப்பகுதியில் கூடி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடலை எடுக்க விடாமல் அவர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என உறவினர்கள் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் வந்து சேர்ந்தார் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. பொதுமக்கள் மற்றும் முத்துக்கிருஷ்ணனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என உறவினர்கள் முழக்கமிட்டனர் அப்பகுதியில் உள்ள சுத்தமல்லி சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்திற்கு அவர்கள் முயன்றனர் காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். எனினும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அங்குள்ள பள்ளி ஒன்றில் மாற்று சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கும் முத்துக்கிருஷ்ணனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்