காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-11-26 00:57 GMT
  • நாகையில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்... இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை மையம் தகவல்...
  • டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்... சென்னையில் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை...
  • திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம், அடியக்கமங்கலம், கோட்டூர், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை... ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் மழை தொடக்கம்...
  • சென்னை தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மிதமான மழை... திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல்...
  • நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கனமழை எச்சரிக்கையை அடுத்து மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு... மயிலாடுதுறையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு...
  • டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை அடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு... புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விளக்கம்...
  • பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி... அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்...
  • மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அலுவலர்கள் குழு நியமனம்... அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்ததாகவும் அறிவிப்பு...
  • சபரிமலையில் பம்பை, நிலக்கல் பகுதிகளில் இடி, மின்னலுடன் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் தெரிவித்த கருத்தில் எள்ளளவும் தவறில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கம்... மன்னிப்பு கேட்கும் பழக்கம் தங்களுக்கு இல்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பா.ம.க. போராட்டம்... ராமதாஸ் குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்தை கண்டித்து போராட உள்ளதாக அறிவிப்பு...
  • பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி... பெர்த் மைதானத்தில் முதல் முறையாக வெற்றிபெற்று வரலாற்று சாதனை...
Tags:    

மேலும் செய்திகள்