மன்சூர் அலிகான் போட்ட கேஸ்... குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவிக்கு பறந்த உத்தரவு - கோர்ட் அதிரடி
- நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய வீடியோ சர்ச்சையான நிலையில், அவருக்கு திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
- இந்தநிலையில், முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மன்சூர் அலிகான் மன நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
- மூவரும் தனக்கு தலா 1 கோடி ரூபாய் தர வேண்டுமென அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.
- இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென, மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது
- மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டிய நீதிமன்றம், எந்த தவறும் செய்யவில்லை என்றால், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகவா மன்சூர் அலிகான் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரினார் எனவும் கேள்வி எழுப்பியது
- இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர், மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், திரிஷா எக்ஸ் தளத்தில் அவரை பற்றி பதிவிட்டதை நீக்க வேண்டுமெனவும் கோரினார்.
- இதனையடுத்து நீதிமன்றம், மன்சூர் அலிகானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகைகள் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.