தமிழகத்துக்கு ரூ.70.23 கோடி கொடுத்த மத்திய அரசு
மாமல்லபுரத்தில் பாரம்பரிய பூங்காவை ஏற்படுத்த 99 கோடியே 67 லட்சம் ரூபாயும், கூடலூர் அருகே தேவாலா பகுதியில் மலர்கள் பூங்கா அமைக்க சுமார் 70 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த கூடலூர் பகுதி மக்கள், இதன் மூலம் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் வாழ்வாதாரம் பெருகும் எனத் தெரிவித்தனர். சுற்றுலா தளத்திற்காக நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.