மதுராந்தகம் அருகே மழைநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி கிராமத்தில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியை மழைநீர் மற்றும் ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீர் சூழ்ந்தது. மழைநீரில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை, தகவலின் பேரில் சென்ற தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட பொதுமக்கள் அங்கன்வாடி மையம், நூலகம் உள்ளிட்டவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்