தென்தமிழகத்தில் முதல்முறையாக சிக்கலான இதய ரத்தக்குழாய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் மல்லப்புரத்தை சேர்ந்த 63 வயது முதியவர் சேகருக்கு இருதய பாதிப்பு, மகாதமனி வீக்கம் உள்ளிட்ட பாதிப்பும் கண்டறியப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு 20 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் அறுவை சிகிச்சை செய்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் தனியார் மருத்துவமனைகள் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேகருக்கு இதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட 3 அறுவை சிகிச்சைகளையும் மருத்துவக் குழுவினர் 8 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.