நொடியில் வந்த மரணம்... நினைத்து பார்க்காத கோரம் - மதுரை உசிலம்பட்டியில் அதிர்ச்சி

Update: 2024-09-26 10:56 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நின்றிருந்த 2 ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

செட்டியபட்டி கிராமத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல சாலையோரத்தில் 2 ஆட்டோக்கள் நின்றிருந்தன. அப்போது, ஆண்டிப்பட்டியில் இருந்து அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் விமல்ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பள்ளி மாணவி ஜெசிகா மற்றும் அவரது தந்தை தவராஜா, மலைராமன், அறிவழகன், மலைராஜா, விஜயக்குமார் ஆகிய 6 பேர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் டிப்பர் லாரியை தூக்கி இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது. விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்