ரோட்டோரம் நின்றவர்கள் மீது குண்டுவீச்சு... சரமாரியாக வெட்டிய கும்பல்... மதுரையில் பரபரப்பு

Update: 2024-04-21 10:30 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, முன்விரோதத்தில் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலூர் அருகே கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவரும், ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் என்பவரும், நேற்று நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் மீது, 8 பேர் கொண்ட மர்ம கும்பல், டிபன் பாக்ஸ் உடன் கூடிய நாட்டு வெடி குண்டை வீசியது. இதில், நவீன்குமாரின் கார் பலத்த சேதம் அடைந்தது. பின்னர், இருவரும் தப்பிக்க முயன்றபோது, இருவரையும் அரிவாளால் மர்ம கும்பல் தாக்கியுள்ளனர். இதில் நவீன்குமாருக்கு, சுண்டு விரலில் முறிவும், கண்ணனுக்கு முதுகில் வெட்டும் விழுந்தது. அப்போது, கிராம மக்கள் ஒன்று கூடியதால், மர்ம கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து, கீழவளவு போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். புகையிலை விற்பனை தொடர்பான முன்விரோதத்தில், இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்