``நான் கூட உன்ன இப்படி பண்ணது இல்லையேடா மகனே’’ - விடிய விடிய புலம்பி தந்தை அதிர்ச்சியில் மரணம்
ஈரோடு மாவட்டத்தில் தந்தையின் கண் முன்னேயே மகனை போலீசார் தாக்கியதால் மன உளைச்சலில் இருந்த தந்தை அன்று நள்ளிரவே மரணமடைந்தார். இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அரச்சலூரை சேர்ந்த ராஜேந்திரன், அரச்சலூர் காவல்நிலையம் அருகே உள்ள சாலை தடுப்பில் மோதிவிட்டார். உடனடியாக அவரை அரசனூர் போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து காவல்நிலையம் வந்த ராஜேந்திரனின் மகனை, தந்தை கண் முன்னேயே போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன், அன்று நள்ளிரவே உயிரிழந்தார். இந்நிலையில் தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகன் புகார் கொடுத்துள்ளார்.