தொடர் விடுமுறையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து அதிகாலை முதல் நளதீர்த்த குளத்தில் புனித நீராடி எள் தீபமேற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.